பெங்களூரு : பெங்களூரில் ‘ஹலால்’ இறைச்சிக்கு போட்டியாக ‘ஜட்கா’ இறைச்சி குறித்து ஹிந்து அமைப்பினர் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். ‘ஜட்கா’ இறைச்சி இலவச டோர் டெலிவரி தரப்படும் என அறிவித்துள்ளனர்.கர்நாடகாவில் முஸ்லிம்களின் ‘ஹலால்’ இறைச்சியை புறக்கணிக்க வேண்டும் என்ற இயக்கம் ஆரம்பமாகி உள்ளது.
அதற்கு போட்டியாக பெங்களூரில் ‘ஜட்கா’ இறைச்சி குறித்து ஹிந்து அமைப்பினர் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.எந்த ஒரு விலங்கையும் ஒரே முறையில் ஆயுதத்தால் வெட்டி கொல்லப்படும் முறை ‘ஜட்கா’ எனப்படுகிறது. இதில் குறைந்தபட்ச துன்புறுத்தல் மட்டுமே இருக்கும்.’ஜட்கா’ இறைச்சி கடைகளில் அதிரடி விலை குறைப்பை அறிவித்துள்ளதுடன், எட்டு கி.மீ., வரை இலவச டோர் டெலிவரி அறிவிக்கப்பட்டுள்ளது.பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதியில் எப்போதும் இறைச்சியை வாங்க கூட்டம் குவியும். ஆனால் ஹிந்துக்களின் விழிப்புணர்வால் என்ன ஆகும் என தெரியவில்லை.
பெங்களூரு : பெங்களூரில் ‘ஹலால்’ இறைச்சிக்கு போட்டியாக ‘ஜட்கா’ இறைச்சி குறித்து ஹிந்து அமைப்பினர் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். ‘ஜட்கா’ இறைச்சி இலவச டோர் டெலிவரி தரப்படும்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.