இந்தியாவில் 122 ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்ச வெயிலின் அளவு கடந்த மார்ச் மாதத்தில் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது.
குறிப்பாக ஈரோடு, மதுரை, திருச்சி, கரூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ் அதிகமான வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தியாவில் 1901 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெயிலின் அளவு கடந்த மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2002 மார்ச் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை 33.1 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளது. இதற்கு முன் இந்தியாவில் 1901 ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் அளவு கடந்த 2010ஆம் ஆண்டு 33 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.