இந்திய மொபைல் போன் சந்தையில் M33 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது சாம்சங் நிறுவனம். இந்நிறுவனம் மலிவான விலையில் 5G போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் நோக்கத்தில் M33 5G போனை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஆக்டா-கோர் எக்ஸினோஸ் புராசஸர், 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வகையான ஸ்டோரேஜ் வேரியண்ட், 6000mAh பேட்டரி, 25 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட், பின்பக்கத்தில் நான்கு கேமரா, கொரில்லா கிளாஸ் என சிறப்பம்சங்களில் அசத்துகிறது இந்த போன்.
இதில் 6ஜிபி ரேம் வேரியண்ட் 18,999 ரூபாய்க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் வேரியண்ட் போனின் விலை 20,499 ரூபாயாக உள்ளது. இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் இந்த போனை ஆன்லைன் மூலம் வரும் 8-ஆம் தேதி முதல் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரில்லா கிளாஸ் கொண்டுள்ள இந்த போனுக்கு அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் வாங்கும் வாடிக்கையாளர்கள் சலுகை விலையில் இந்த போனை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன் சந்தையில் மோட்டோ, ரெட்மி மாதிரியான போன்களுக்கு விற்பனையில் சவால் கொடுக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது.