மும்பை: சென்னை அணிக்கு 181 ரன்களை வெற்றி இலக்காக பஞ்சாப் அணி நிர்ணயம் செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. பின்னர் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.