உடற்கல்வி ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் உருவாக்குதல் ,பேராசியர்கள் பரிமாற்றம் உள்ளிட்டவைக்காக எஸ்ஆர்எம் மற்றும் குவாலியர் லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி நிறுவனம் இணைந்து ஒப்பந்தம் செய்துள்ளன.
உடற்கல்வி மேம்பாட்டில் ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி திட்டங்களை உருவாக்குதல், உடற்கல்வி தொழில்நுட்ப உதவி, தொழில்நுட்ப கல்வி மற்றும் பேராசியர்கள் பரிமாற்றம், திறன் மேம்பாட்டு திட்டங்கள், தேசிய கல்வி கொள்கை 2020க்கு ஆதரவு மற்றும் அமல்படுத்துதல் உள்ளிட்ட உடற்கல்வி சம்மந்தமான பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்காக எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனமும், மத்திய பிரதேச மாநிலம், குவாலியர் லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி நிறுவனமும் இணைந்து ஒப்பந்தம் செய்துள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வு மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் மத்திய பிரதேசம் குவாலியர் லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி நிறுவன துணைவேந்தர் பேராசிரியர் விவேக் பாண்டே, பதிவாளர் பேராசிரியர் ஏ.எஸ்.சஜிவான், எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவன பதிவாளர் முனைவர் எஸ். பொண்ணுசுவாமி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையொப்பமிட்டு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவன விளையாட்டு இயக்குனர் முனைவர் ஆர். மோகனகிருஷ்ணன், குவாலியர் லட்சுமி தேசிய உடற்கல்வி நிறுவன உடற்கல்வி உளவியல் துறை தலைவர் பேராசிரியர் எம்.கே.சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM