Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல் விலை 75 காசுகள் உயர்ந்து ரூ.108.96க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 76 காசுகள் உயர்ந்து ரூ.99.04க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 12 நாட்களில் பெட்ரோல் ரூ.7.56-ம், டீசல் ரூ.7.61-ம் அதிகரித்துள்ளது.
Tamilnadu updates: நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்களை சிறைப் பிடித்தது இலங்கை கடற்படை.
ரமலான் நோன்பு தொடக்கம்
ரமலான் நோன்பு தொடங்கியது. ரமலான் நோன்பு நோற்பது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ஆகும்.
India News Update : ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே நள்ளிரவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 3.6 ஆக பதிவாகியதாக இந்திய நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்தது.
World news update: இலங்கையில் சமூக வலைதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்ட சேவைகள் முடங்கியுள்ளன. அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
IPL update: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் வீழ்த்தியது.
மற்றொரு ஆட்டத்தில் மும்பை அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2 வெற்றிகளைப் பெற்றது.
நடப்பு சாம்பியனான மும்பை இன்னும் ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
ஒமைக்ரான் உருமாற்ற வைரஸை விட வேகமாக பரவும் எக்ஸ்இ என்ற புதிய வைரஸ் இங்கிலாந்து பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
1 முதல் 12 ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
கடந்த 30ம் தேதி ரூ.6க்கு விற்ற தக்காளி தற்போது ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது. பீன்ஸ் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.
நடிகர் விஜயின் பீஸ்ட் பட டிரெய்லர் வெளியாகி 12 மணி நேரத்திலேயே 2 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
பாகிஸ்தானில் இம்ரான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
பாகிஸ்தான் விடுதலை பெற்ற பிறகு பதவியேற்ற எந்த அரசும், இதுவரை 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்தது இல்லை என்ற சோகத்தை இம்ரான்கான் மாற்றுவாரா என அந்நாட்டு மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.