கடும் மழை காரணமாக பெரகல – கொஸ்லந்த வீதியில் போக்குவரத்து பாதிப்பு

நேற்றிரவு பெய்த கடும் மழை காரணமாக கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியின் பெரகல, கல்கந்த பிரதேசத்தில் மண்மேடு பாறைகள்  சரிந்துவீழ்ந்ததினால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3ஆம் திகதி இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக ,காப்பட் இடும் பணி அண்மையில் நிறைவுபெற்ற கல்கந்த கீழ்ப் பிரிவு வீதியின் ஒரு பகுதியும்  பாதிக்கப்பட்டுள்ளது.

சரிந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணி, ஹல்துமுல்ல பிரதேசச் செயலாளரின் கண்காணிப்பின் கீழ், ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பெரகல மற்றும் கொஸ்லந்தவிற்கு இடையில் பெரகல – கிராவணகம – நிகபொத மாற்று வீதியை பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.