நாடு முழுதும் மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமர் மோடி எடுக்கும் முடிவு?

இந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் அமலாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியா கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என மூன்று அலைகளை சந்தித்து விட்டது. இதில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை நாட்டில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. அதாவது ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொரோனா மூன்றாவது அலை வேகமாகப் பரவினாலும் உயிரிழப்பு விகிதம் குறைவாகவே இருந்தது. இந்த அலையின் தாக்கம் கடந்த ஜனவரி மாத இறுதியில் குறைந்ததை அடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்வு நிலை மீண்டும் திரும்பியது. இதை அடுத்து, கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதியுடன் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரிட்டனில்,
ஒமைக்ரான்
தொற்றின் புதிய திரிபான எக்ஸ்.இ வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வகை தொற்று, ஒமைக்ரான் தொற்றை விட மிகவும் ஆபத்தானது என்றும், அதி வேகமாகப் பரவக் கூடியது என்றும், உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரிட்டன் நாட்டில்
புதிய வகை கொரோனா
தொற்று பரவி வருவதால், இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எக்ஸ்.இ வகை கொரோனா தொற்று, இந்தியாவுக்கு பரவுவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எக்ஸ்.இ வகை கொரோனா தொற்றை சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, இந்தியாவில் வரும் ஜூன் மாதத்தில் கொரோனா நான்காவது அலை பரவ வாய்ப்பு உள்ளதாக ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி3 டிவீட்.. பெங்களூரு பேரு டோட்டலா காலி.. பொம்மை கருத்து என்னவோ?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.