புதுடெல்லி:
இந்தியாவில் கடந்த 716 நாட்களில் இல்லாத அளவில் கொரோனா பாதிப்பு நேற்று ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த நிலையில், இன்று மேலும் சரிந்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 795 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 29 ஆயிரத்து 839 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் கடந்த 2 நாட்களாக புதிய உயிரிழப்புகள் இல்லை. அதேநேரம் விடுபட்ட 56 மரணங்கள் தற்போது பட்டியலில் சேர்க்கப்பட்டது.
இதுதவிர கர்நாடகா, டெல்லியில் தலா ஒருவர் என மேலும் 58 பேர் தொற்றால் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,21,416 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 1,280பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 96 ஆயிரத்து 369ஆக உயர்ந்தது.
தற்போது 12,054 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்றுமுன் தினத்தை விட 543 குறைவு ஆகும்.
நாடு முழுவதும் நேற்று 16,17,668 டோஸ்களும், இதுவரை 184 கோடியே 87லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.