புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள தஸ்னா தேவி கோயில் தலைமை சாமியாராக இருப்பவர் யதி நர்சிங்கானந்த். ஹரித்துவாரில் நடந்த இந்து மகாபஞ்சாயத்து நிகழ்ச்சியில் மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக சாமியார் நர்சிங்கானந்த் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடைபெற்ற இந்து மகா பஞ்சாயத்து நிகழ்ச்சியில் நர்சிங்கானந்த் பேசும்போது, ‘‘வரும் 2029 அல்லது 2034 அல்லது 2039-ம் ஆண்டு இந்தியாவில் முஸ்லிம் ஒருவர் பிரதமராக வருவார். அப்படி பிரதமரானால், 20 ஆண்டுகளில் 50 சதவீத இந்துக்கள் மதம் மாற்றப்படுவார்கள். 40 சதவீத இந்துக்கள் கொல்லப்படுவார்கள். 10 சதவீதம் பேர்அகதிகள் ஆவார்கள். எனவே இந்துக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஆயுதங்கள் எடுத்து போரிட வேண்டும்’’ என்றார். இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.