இறந்ததாக அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி – நடந்தது என்ன?

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள துறையம்பாளையம் கிராமத்தில் இறந்து போனதாக அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள துறையம்பாளையத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி, கரும்பு வெட்டும் கூலி வேலை செய்யும் இவர், கர்நாடகா மாநிலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு கரும்பு வெட்டும் வேலைக்குச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரும்பு வெட்டும் வேலைக்குச் சென்ற மூர்த்தி பின்னர் வீடு திரும்பவில்லை, மூர்த்தியின் மகன்கள் கார்த்தி மற்றும் பிரபுகுமார் ஆகியோர் பல இடங்களில் மூர்த்தியை தேடிப்பார்த்தனர். ஆனால், அவர் கிடைக்காத நிலையில், தேடுவதை தொடர்ந்தனர்.
image
இதையடுத்து கடந்த 31-ஆம் தேதி சத்தியமங்கலம் பேருந்து நிலையம் பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக கார்த்திக்கிற்கு வாட்ஸ் அப்பில் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து கார்த்திக் அங்கு சென்று பார்த்த போது, முகம் அழுகிய நிலையில் இருந்ததாலும் அவரது தந்தையை போன்ற தோற்றத்துடன் இருந்ததாலும் இறந்து கிடந்தவர் தனது தந்தை தான் என முடிவு கார்த்திக் முடிவு செய்தார்.
உடனே சடலத்தை துறையம்பாளையம் கொண்டு சென்று உரிய முறைப்படி சடங்குகள் செய்து அடக்கம் செய்தார், இந்நிலையில் இறந்து போனதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட மூர்த்தி நேற்றிரவு உயிருடன் வீடு திரும்பினார். அவரை பார்த்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தாலும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
image
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பங்களாபுதூர் போலீசார் உடனடியாக மூர்த்தி வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். இறந்து போனதாக கூறி அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் வந்த தகவல் பரவியதால் கிராம மக்கள் மூர்த்தியை பார்த்துச் சென்றனர். இதனால் துறையம்பாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டது,Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.