கொழும்பு,
இலங்கையில் பொருளாதார நெருக்கடி உச்சமடைந்துள்ளது. பிரதமர் மகிந்தா ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மந்திரிகள் அனைவரும் நேற்று ராஜினாமா செய்தனர். இதனை தொடர்ந்து நிலைமையை கையாளும் வகையில் 4 பேர் கொண்ட இடைக்கால மந்திரி சபை அமைக்கப்பட்டது.
அதன்படி, நாட்டின் நிதி மந்திரியாக இருந்த அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய நிதி மந்திரியாக அலி சப்ரி நேற்று நியமிக்கப்பட்டார்.
அலி சப்ரி மற்றும் மேலும் 3 புதிய மந்திரிகளுக்கு அதிபர் கோத்தபயா நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், புதிய நிதி மந்திரியாக பொறுப்பேற்ற அலி சப்ரி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அலி சப்ரி பதவியேற்ற 24 மணி நேரத்தில் நிதி மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதனால், இலங்கை அரசியலில் உச்சபட்ச குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு இலங்கையில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அதிபர் கோத்தபயா அழைப்பு விடுத்துள்ளார்.