தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் நடைபெற்று வரும் பணிகளில் முதற்கட்டமாக முதலமைச்சர் அலுவலகம், தகவல் தொழில்நுட்பம், வருவாய் உள்ளிட்ட 8 துறைகளின் அலுவலகங்கள் இ ஆபிஸ் முறைக்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசு அலுவலகங்களை கணினிமயமாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பழைய கோப்புகளை இணையத்தில் பதிவேற்றும் பணியில் 25 ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர். அரசு அமைப்புகள், முக்கிய அலுவலகங்கள் என 500க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் இ-அலுவலகமாக்கும் பணிகள் 6 மாதங்களுக்குள்ளாக முடிவடையும் என எதிர்பார்பக்கப்படுகிறது.
Work from Anywhere என்ற முறையில் எங்கிருந்தும் பணியாற்றும் வசதியின் காரணமாக, பேரிடர் காலங்களிலும் அலுவலகப்பணிகளை மேற்கொள்ள முடியும். இ அலுவலகம் குறித்த சந்தேகங்களுக்காக ஊழியர்களுக்கு பயிற்சியளிக்கும் பணிகளும் தலைமைச்செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. இதுதான் இனி எங்கள் அலுவலகம், மகிழ்ச்சியான மனித வளம், Digital Tamilnadu என கணினி மயமாக்கப்பட்ட படங்கள் தலைமைச்செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஒட்டப்பட்டுள்ளதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM