உக்ரைனின் புச்சா நகரில் சைக்கிளில் சென்றவர் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் புச்சா நகரில் ரஷ்ய ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போர் விதிமுறைகளை மீறி கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்து வருகிறது.
இதையடுத்து உக்ரைனின் புச்சா நகரில் பொதுமக்கள் சித்திரவதை செய்யப்பட்டு தெரு வீதிகளில் கொல்லப்பட்டு கிடக்கும் வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், ரஷ்யாவின் இந்த வெறிச்செயலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
New drone imagery shows Russian forces firing on a cyclists in Bucha, on Yablunska Street at 50.54148, 30.228898, where multiple corpses have been filmed and photographed https://t.co/1GPF9NJjcB pic.twitter.com/CBR3DnMyyq
— Bellingcat (@bellingcat) April 5, 2022
இந்தநிலையில், புச்சா நகரில் சைக்கிளில் சென்ற நபர் ஒருவரின் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ பதிவில், சாலையின் முனையில் இருந்து வரிசையாக நின்று கொண்டிருந்த ரஷ்ய துருப்புகளை கவனிக்காமல் அப்பகுதி வழியாக வந்த சைக்கிள் ஓட்டுநர் மீது டாங்கிகளால் தாக்குதல் நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் இதனை தொடர்ந்து ரஷ்ய துருப்பு பின்நகர்விற்கு பிறகு அப்பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சைக்கிளுடன் ஒருவர் இறந்து கிடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் இதனை ரஷ்யா ராணுவம் தான் செய்துள்ளதா என்பது குறித்த விசாரணையை தற்போது உக்ரைன் அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது.
புச்சா படுகொலை…கண்டிப்பாக புடின் நரகத்திற்கு செல்வார்: குமுறும் உக்ரைன் அமைச்சர்!