கொரோனா காலகட்டத்தில் நம் அனைவரையும் வீட்டிலேயே முடக்கிப் போட்டது ஊரடங்கு. இந்த ஊரடங்கின் விளைவாக பிராட்பேண்ட் நிறுவனங்கள் அதிக வளர்ச்சியைக் கண்டது. வீட்டில் இருந்து பணிகளை மேற்கொள்ளும்படி பெருவாரியான ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவிப்பு அனுப்பியது.
இந்த நிலையில் அனைவருக்கும் வைஃபை இணைப்பு தேவைப்பட்டது. தொடர்ந்து அனைவரும் பிராட்பேண்ட் திட்டத்தைத் தேடிச் சென்றனர். சில நிறுவனங்களின் சேவைகள் வெகு மோசமாக இருந்தாலும், சில டெலிகாம் ஆபரேட்டர்கள் நல்ல பிராட்பேண்ட் சேவையை இச்சமயத்தில் பயனர்களுக்கு வழங்கினர்.
ஆனால், வீட்டில் தீவிரமாக வேலைபார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென வைஃபை சிக்னல் கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும். வைஃபை கிடைக்கவில்லை என்றால், உடனடியாக சேவை வழங்கும் நிறுவனத்தை குறை கூற வேண்டும் என்று அவசியமில்லை. உங்கள் வீட்டில் இருக்கும் ரவுட்டர், பவர் கனெக்ஷன் ஆகிய சரியாக இருக்கிறதா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும்.
அதன்பின்னர் தான் சேவை வழங்கும் நிறுவனத்தை அணுக வேண்டும். தற்போது என்னென்ன பிரச்னைகள் நிகழும் என்று ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். அந்த பிரச்னைகளை சரிசெய்யும் முறைகள் குறித்தும் அறிந்துகொள்ளலாம்.
குண்டை தடுத்த நிறுத்திய ஹெட்போன் – நம்பமுடிகிறதா!
அதிகபடியான இணைப்புகள்
ஒரு சிங்கிள் ரவுட்டரை வைத்துக் கொண்டு பல கேட்ஜெட்டுகளை வைஃபை சிக்னல் மூலம் இணைத்திருப்பது முதல் காரணமாக இருக்கலாம். எல்லா டிவைசுகளுக்கும் சிக்னலை பிரித்தளிப்பதில் ரவுட்டர் திணறும். இதனால், இந்த ரவுட்டரில் இணைக்கப்பட்டுள்ள சில கேட்ஜெட்டில் சிக்னல் தடைப்படும். இந்த பிரச்னையை சரிசெய்ய ஒன்றிரண்டு 5GHZ திறனுள்ள டூயல் பேண்ட் வைஃபை ரவுட்டரை கூடுதலாக இணைத்துக் கொள்ள வேண்டும்.
முக்கியமாக, நீங்கள் பல ரவுட்டர்களை இணைக்கும் முன் உங்கள் இணையத்தின் வேகம் சரியாக பகிர்ந்தளிக்கும் படியான திட்டங்களை வைத்திருக்க வேண்டும். அதாவது 100Mbps திட்டம் என்றால், ஒரே நேரத்தில் கூடுதலாக 5 தகவல் சாதனங்களுக்கு மேல் அதில் இணைக்கக்கூடாது. நீங்கள் பயன்படுத்தும் கேட்ஜெட்டுகளின் எண்ணத்தை பொறுத்து அனைத்தையும் திட்டமிட வேண்டும்.
தவறான இடத்தில் ரவுட்டரை வைத்திருப்பது
அடைந்த இடத்தில் ரவுட்டரை வைப்பது சரியான முடிவல்ல. நல்ல காற்று வெளியுள்ள இடத்தில் ரவுட்டரை வைக்க வேண்டும். ரவுட்டருக்கு அருகில் மைக்ரோவேவ், கார்ட்லெஸ் மொபைல் போன்ற கருவிகள் இருந்தால் சிக்னல் தடைபடும். காரணம் உலோக பொருள்கள் சிக்னலை வெகுவாக பாதிக்கும். பக்கத்து வீட்டு ரெளட்டரிடம் இருந்து உங்கள் ரெளட்டரை முடிந்தவரை தள்ளி வையுங்கள். இரண்டு சிக்னல்களும் க்ராஸ் செய்தாலும் சிக்னல் பாதிக்கப்படும்.
அலைக்கதிர்களின் தடங்கல்கள்
எப்போதும் மின்னணு பொருள்களுக்கு பக்கத்தில் இருந்து ரவுட்டரை தள்ளியே வைத்திருங்கள். இது உங்கள் சிக்னலுக்கு தடங்கலாக இருக்கும். இந்த மின்னணு பொருள்களில் இருந்து வெளியேறும், அலைக்கதில் சிக்னல் செல்லும் வழியில் தடங்கல்களை ஏற்படுத்தும். எனவே, முடிந்தவரை ரவுட்டரை சிறிது உயரமான இடத்தில் வைக்க முயற்சி செய்யுங்கள். உயரத்தில் வைக்க வேண்டும் என்பதற்காக மோட்டில் எடுத்து வைக்கக் கூடாது. வீட்டில் மின்னணு பொருள்கள் இருக்கும் இடத்தை விட சற்று உயரமான இடத்தில் ரவுட்டரை வைக்க வேண்டும்.
வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ள 6 புதிய அம்சங்கள்!
ரவுட்டருக்கு ஓய்வு
ஓய்வில்லாமல் உழைக்கும் எந்த சாதனமும் நல்லா நிலைத்து உழைத்ததா சரித்திரமே இல்ல. எனவே, அனுதினமும் அணையாமல் சிக்னலை வெளியிட்டு உங்கள் இன்டர்நெட் தேவையைப் பூர்த்தி செய்யும் ரவுட்டரை தூங்கச் செல்லும் முன் அணைத்து விடுங்கள். இதனால் சற்று ஓய்வில் இருக்கும் ரவுட்டர், மறுநாள் திறன்பட தனது வேலையைத் தொடங்கும்.
முடிவாக, வேலை நேரத்தில் ஏதேனும் சிக்னல் பிரச்னை நிகழ்ந்தால், ரவுட்டரை அணைத்து விட்டு மீண்டும் ஆன் செய்து முயற்சித்து பாருங்கள். பிரச்னை தொடர்ந்து உடனடியாக சேவை வழங்கும் பிராட்பேண்ட் ஆபரேட்டரை அணுகுங்கள்.
மேலதிக செய்திகள்:
பிற செயலிகளை வலுவிழக்கச் செய்கிறதா சியோமி – காரணம் என்ன?காசே இல்லாம IRCTC ரயில் டிக்கெட்! பேடிஎம் அதிரடி!Google Maps உதவியுடன் ரயிலின் Live Status-ஐ தெரிந்து கொள்ளலாம்!
அடுத்த செய்திகுண்டை தடுத்த நிறுத்திய ஹெட்போன் – நம்பமுடிகிறதா!