உடுப்பி, : சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த நபரின் உறுப்புகள், ஆறு பேருக்கு பொருத்தப்பட்டன.உடுப்பி பிரம்மாவரை சேர்ந்தவர் ராஜு. இவரது மகன் சீனிவாஸ், 19. ஏப்ரல் இரண்டாம் தேதி, இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றிருந்தார்.உப்பினகோட்டே அருகே செல்லும் போது வாகன விபத்தில் படுகாயமடைந்த அவர், மணிப்பாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சை பலனின்றி மூளை சாவு ஏற்பட்டது.
இதனால் சீனிவாசின் பெற்றோரிடம், உறுப்பு தானம் செய்வது குறித்து டாக்டர்கள் ஆலோசித்தனர்.இதற்கு பெற்றோரும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து, சீனிவாசின் இரு சீறுநீரகம், கல்லீரல், தோல், கண் கரு விழிகள், ஆறு பேருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து, இரு கருவிழிகள், இரு சிறுநீரகம், தோல், சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் இருந்த மருத்துவமனைக்கும், கல்லீரல், பெங்களூரிலுள்ள மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டது.
உடுப்பி, : சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த நபரின் உறுப்புகள், ஆறு பேருக்கு பொருத்தப்பட்டன.உடுப்பி பிரம்மாவரை சேர்ந்தவர் ராஜு. இவரது மகன் சீனிவாஸ், 19. ஏப்ரல் இரண்டாம் தேதி, இரு சக்கர
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.