புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று எரிபொருள் விலை உயர்வு குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது:
ஏப்ரல் 2021 மற்றும் மார்ச் 22-க்கு இடையிலான காலகட்டத்தில், அமெரிக்கா எரிபொருள்(பெட்ரோல்) விலையை 51 சதவீதம் அதிகரித்துள்ளது.
அந்த ஒரு வருட காலகட்டத்தில், கனடா 52 சதவீதம், ஜெர்மனி 55 சதவீதம், இங்கிலாந்து 55 சதவீதம், பிரான்ஸ் 50 சதவீதம், ஸ்பெயின் 58 சதவீதம் பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளன. ஆனால் இந்தியாவில் 5 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்…இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்ட 22 யூ டியூப் சேனல்கள் முடக்கம்