ஒருவேளை பீஸ்ட் படத்துல விஜய் நடிக்கலனா இதுதான் நடந்திருக்கும்:நெல்சன்

கோலமாவு கோகிலா
என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி வெற்றி கண்டார்
நெல்சன்
.
நயன்தாரா
நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. டார்க் காமெடி வகையை சார்ந்த இப்படம் நெல்சனுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

அடுத்ததாக இவர் இயக்கிய டாக்டர் படமும் மாபெரும் வெற்றிபெறவே தமிழ் சினிமாவில் பரபரப்பான இயக்குனராக வலம் வரத்துவங்கினார் நெல்சன். இருப்பினும் டாக்டர் படம் வெளியாவதற்கு முன்பே விஜய்யின் படத்தில் கமிட்டானார் நெல்சன்.

பீஸ்ட் படத்திற்கு தடை? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நெல்சன் மற்றும்
விஜய்
இணையும்
பீஸ்ட்
படத்தின் அறிவிப்பு வெளியானது. அதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் படபிடிப்பெல்லாம் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் இப்படத்திலிருந்து ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது நெல்சன் இப்படத்தைப்பற்றி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது பீஸ்ட் படத்தின் கதையை முழுக்க முழுக்க விஜய்க்காகவே உருவாக்கினாராம் நெல்சன். பீஸ்ட் படத்தின் கதையை எழுதும்போதே விஜய்யை மனதில் வைத்துதான் நெல்சன் எழுதினாராம்.

பீஸ்ட்

ஒரு இயக்குனராக மட்டுமில்லாமல் ஒரு ரசிகராக விஜய்யை திரையில் எப்படி பார்க்கவேண்டும் என்று ஆசைப்படுவோமோ அதை மனதில் வைத்தே பீஸ்ட் கதையை நெல்சன் உருவாக்கியதாக கூறுகின்றார்.

மேலும் ஒருவேளை பீஸ்ட் படத்தில் விஜய் நடிக்கவில்லை என்றால் இப்படம் உருவாகாமல் இருந்திருக்கும். வேறு ஹீரோவை வைத்தும் என்னால் பீஸ்ட் படத்தை எடுத்திருக்கமுடியாது. ஏனென்றால் ஒவ்வொரு காட்சியும் வசனமும் விஜய்க்காகவே பார்த்து பார்த்து எழுதியதால் அக்கதையில் வேறொரு ஹீரோவை நடிக்கவைக்க முடியாது என்றார் நெல்சன்.

விஜய்

இந்நிலையில் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

9 வருஷம் கழிச்சு டிவி நிகழ்ச்சியில் விஜய், தொகுப்பாளர் யாரு தெரியுமா?

அடுத்த செய்திதளபதியின் ‘பீஸ்ட்’ ஓவர்: ‘தலைவர் 169’ படத்திற்காக தீயா வேலை செய்யும் நெல்சன்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.