பெங்களூரு : ”எனக்கு ஐந்து ஆண்டு ஆட்சி அமைக்க வாய்ப்பு கொடுத்தால் நீர்ப்பாசன திட்டங்களை முழுயாக நிறைவேற்றுவேன். கொடுத்த வாக்கை மீறினால் கட்சியை கலைப்பேன்,” என முன்னாள் முதல்வர்குமாரசாமி கூறினார்.பெங்களூரில் நடந்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் குமாரசாமி பங்கேற்றார்.அவர்
கூறியதாவது:எனக்கு ஐந்து ஆண்டு முழுமையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுங்கள். அப்போது அனைத்து நீர்பாசன திட்டங்களையும் செய்து முடிப்பேன்.அப்படி ஒருவேளை கொடுத்த வாக்கை நிறைவேற்றா விட்டால் கட்சியை கலைப்பேன். ஹனுமன் ஜெயந்தியன்று ‘ஜனதா ஜலதாரே’ நிகழ்ச்சியை துவக்க உள்ளேன்.கர்நாடகாவில் நில சீர்த்திருத்த சட்டம் வந்தபோது, நான் அமைதியாக இருந்ததாக சொல்கின்றனர். நான் படிப்பை முடித்தவுடன் 17 லட்சம் கடன் வாங்கி தியேட்டர் கட்டினேன். தியேட்டர் திறப்பு விழாவின் போது என் தந்தை ஒரு வார்த்தை சொன்னார்.
தியேட்டர் உன் வாழ்க்கையை காப்பாற்றாது என்றார். இந்த நிலம் தான் உன்னை காப்பாற்றும் என்றார். அதன்படி நான் கேதகானள்ளியில் நிலம் வாங்கி அங்கேயே இருக்கிறேன். நில சீர்த்திருத்த சட்டத்தால் நானும் பல கஷ்டங்களை அனுபவித்துள்ளேன்.இந்த சட்டத்தால் அதிகாரிகள் தான் பணம் சம்பாதிக்கின்றனர். இதனால் நான் அமைதியாக இருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement