அதிஷ்டம் எந்த பக்கம் வேண்டுமென்றாலும் கதவை தட்டும். அதுபோல தான் அமெரிக்கா இளைஞர் ஒருவர், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன கதையாக உயிர் பிழைத்துள்ளார். இந்த நல்வாய்ப்பை அவருக்கு உரித்தாக்கியது ஒரு
ஹெட்போன்
என்றால் உங்களால் நம்பமுடிகிறதா.
இந்த அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் நடந்ததாக Enough_Dance_956 என்ற பெயருடைய தனது ரெட்டிட் (Reddit) பக்கத்தில் இளைஞர் பதிவிட்டுள்ளார். படுக்கை அறை ஜன்னல் வழியாக வந்த தோட்டாவை ஹெட்போன் தடுத்து எனது உயிரை காப்பாற்றியது என்று அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
பிற செயலிகளை வலுவிழக்கச் செய்கிறதா சியோமி – காரணம் என்ன?
உயிரை காத்த ஹெட்போன்
அந்த பதிவில், “இந்த பதிவை பார்க்கும் அனைவருக்கும் வணக்கம். Razer நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கு மனதார நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். காலை 10:30 மணியளவில், படுக்கையறை ஜன்னல் வழியாக வந்த தோட்டா, என் தலையில் வைத்திருந்த ரேசர் ஹெட்போனைத் தாக்கியது.
நல்ல தரத்துடன் தயாரிக்கப்பட்ட ஹெட்ஃபோன்கள் என்பதால் பிழைத்துக் கொண்டேன். இல்லையென்றால், நான் 18 வயதில் இறந்ததாக இந்த உலகம் செய்தி அறிந்திருக்கும். எனது பிரிவால் குடும்பத்தினரும், நண்பர்களும் படும் வேதனையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
அந்த தோட்டா எதோ தொலைவில் உள்ள கட்டடத்தில் இருந்து வந்தது. அது தவறான பாதையில் பயணித்து வந்தது என்பதை நான் உணர்வேன். எனினும், என் நண்பர்களுடன் உரையாடி கொண்டு இருக்கையில் என் உயிர் பிரிந்திருக்கும்.
Razer Kraken ஹெட்போன் சிறப்பம்சம்
நல்வாய்ப்பாக என் தலையில், Razer Kraken ஹெட்போன் இருந்தது. தோட்டா என் ஜன்னல் வழியாக வந்து ஹெட்செட்டில் பட்டு அதை தூக்கி வீசியது. ஹெட்செட் தெறித்து சுவற்றில் இடித்து, பின்னர் என் படுக்கையில் வந்து விழுந்தது. இதனை கண்ட நண்பர்கள் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். காவல் துறையினர் வந்து தோட்டாவை கைபற்றிவதற்காகக் காத்திருந்தோம்,” என்று இளைஞர் பதிவிட்டிருந்தார்.
tata neu app: நம்ம ஊரு டாடாவின் புதிய ‘Neu’ சூப்பர் ஆப் – அனைத்து சேவைகளும் விரல் நுனியில்!
poco x4 pro 5g price: விற்பனைக்கு வந்த போக்கோ சூப்பர் போன் – விலை மற்றும் அம்சங்கள்!
அடுத்த செய்திவிற்பனைக்கு வந்த போக்கோ சூப்பர் போன் – விலை மற்றும் அம்சங்கள்!