விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி தீடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
கோவில்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜன் என்பவர் தனக்கு சொந்தமான டேங்கர் லாரியை ஒசூரில் உள்ள தனியார் பெயிண்ட் ஆலைக்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்கி வருகிறார். இந்த நிலையில் அந்த டேங்கர் லாரியில் மேற்கொண்ட பராமரிப்பு பணிகள் முடிந்ததும் சீதாராமன் என்பவர் லாரியை எடுத்து கொண்டு ஓசூருக்கு புறப்பட்டார்.
மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்ற போது முன்பகுதியில் உள்ள GPS கருவியில் ஏற்பட்ட மின் உராய்வு காரணமாக லாரியில் தீடீரென்று தீ விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.