மும்பை: கடந்த அமர்வில் இந்திய பங்கு சந்தையானது பலமான ஏற்றத்தில் முடிவடைந்ததையடுத்து, இன்று அதற்கு எதிர்மாறாக சரிவில் முடிவடைந்துள்ளது.
இன்று காலை தொடக்கத்திலேயே சென்செக்ஸ் சற்று சரிவிலும், நிஃப்டி சற்று ஏற்றத்திலும் காணப்பட்டது.
இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தினையே ஏற்படுத்தியது எனலாம். இந்த நிலையில் தான் இந்திய சந்தையானது முடிவில் சரிவிலேயே முடிவடைந்துள்ளது.
தடுமாறும் சென்செக்ஸ், நிஃப்டி.. கவனிக்க வேண்டிய யெஸ் வங்கி, எஸ்பிஐ, டிசிஎஸ்..!
தொடக்கம் எப்படி?
இன்று காலை ப்ரீ ஓபனிங்கிலேயே சந்தையானது சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியது. இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 20.30 புள்ளிகள் குறைந்து, 60,591.44 புள்ளிகளாகவும், நிஃப்டி 4.90 புள்ளிகள் அதிகரித்து, 18,058.30 புள்ளிகளாகவும் குழப்பத்திலேயே காணப்பட்டது. இதற்கிடையில் 1795 பங்குகள் ஏற்றத்திலும், 366 பங்குகள் சரிவிலும், 67 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
முடிவில் எப்படி?
பிஎஸ்இ சென்செக்ஸ் முடிவில் 435.24 புள்ளிகள் அல்லது 0.72% குறைந்து, 60,176.50 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 96 புள்ளிகள் அல்லது 0.53% புள்ளிகள் குறைந்து, 17,957.40 புள்ளிகளாகவும் முடிவுற்றுள்ளது. இதற்கிடையில் 2280 பங்குகள் ஏற்றத்திலும், 1035 பங்குகள் சரிவிலும், 97 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.
இதே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 பைசா அதிகரித்து, 75.32 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது கடந்த அமர்வில் 75.54 ரூபாயாக முடிவுற்று இருந்தது.
இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ்,நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக பேங்க் நிஃப்டி 1% மேலாக சரிவிலும், நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் 1% கீழாக சரிவில் காணப்பட்டது. மற்ற குறியீடுகள் பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் நிஃப்டி குறியீட்டில் உள்ள அதானி போர்ட்ஸ், என்.டி.பி.சி, டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட் கார்ப், டாடா கன்சியூமர் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி வங்கி, பஜாஜ் பின்செர்வ், ஹெச்.டி.எஃப்.சி, கோடக் மகேந்திரா, ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள என்.டி.பி.சி, பவர் கிரிட் கார்ப், ஐடிசி, டைட்டன் நிறுவனம், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதுவே ஹெச்.டி.எஃப்.சி வங்கி, பஜாஜ் பின்செர்வ், ஹெச்.டி.எஃப்.சி, கோடக் மகேந்திரா, ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
closing bell: sensex falls 435 points, nifty ends below 18,000
closing bell: sensex falls 435 points, nifty ends below 18,000/சென்செக்ஸ் 435 புள்ளிகள் சரிவு.. நிஃப்டி 18000-கீழ் முடிவு.. என்ன காரணம்!