டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் சத்தமில்லாமல் 2.89 பில்லியன் டாலர் முதலீடு செய்து சுமார் 9.2 சதவீத பங்குகளைக் கைப்பற்றிய நிலையில், டிவிட்டர் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிற்குள் நுழையும் முன்பே டிவிட்டர் தளத்தில் மாற்றங்களைக் கொண்டு வரும் பணிகளைச் செய்யத் துவங்கியுள்ளது.
டிவிட்டர் நிறுவனத்தின் நிறுவனரான ஜாக் டோர்சி 2.2 சதவீத பங்குகளை மட்டுமே வைத்துள்ள நிலையில் எலான் மஸ்க் 4 மடங்கு அதிகப் பங்குகளை வைத்துள்ள காரணத்தால், அதற்கான ஆதிக்கத்தை இப்போதே காட்டத் துவங்கியுள்ளார் எலான் மஸ்க்.
டிவிட்டரில் .89 பில்லியன் முதலீடு.. 9.2% பங்குகளை கைப்பற்றினார் எலான் மஸ்க்..!
எலான் மஸ்க்
சமுக வலைத்தள பிரிவில் முன்னணி தளமாக இருக்கும் பேஸ்புக், இண்ஸ்டாகிராம் பயன்படுத்தாத எலான் மஸ்க் டிவிட்டரில் அதிகப்படியான நேரத்தைச் செலவிடும் நிலையில், பல தவறுகளை அவ்வப்போது சுட்டிக்காட்டி வந்தார்.
அதிகாரம்
இந்நிலையில் இந்தத் தவறுகளைச் சரி செய்யும் பொருட்டு அதற்கான அதிகாரத்தைப் பெற வேண்டும் என்பதற்காகவே 2.89 பில்லியன் டாலர் முதலீடு செய்து 9.2 சதவீத டிவிட்டர் பங்குகளைக் கைப்பற்றியுள்ளார் எனத் தெரிகிறது. இதற்கு ஏற்றார் போல் எலான் மஸ்க் டிவீட்டும் உள்ளது.
எடிட் பட்டன்
இந்நிலையில் டிவிட்டர் பங்குகளை வாங்கிய செய்தி வைரலான நிலையில், எலான் மஸ்க் தனது டிவிட்டர் கணக்கில் டிவிட்டர் பதிவுக்கு எடிட் பட்டன் வேண்டுமா என்ற கேள்வியைக் கேட்டு வாக்கு பதிவை ஆப்ஷன் கொடுத்தார்.
பராக் அகர்வால்
எலான் மஸ்க் POLL வெளியிட்ட அடுத்த சில நிமிடத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ-வான பராக் அகர்வால், எலான் மஸ்க் டிவீட்டுக்கு, இந்த வாக்குப்பதிவின் முடிவுகள் விளைவுகள் மிகவும் முக்கியமானது. எனவே சரியாக வாக்கு அளியுங்கள் கேட்டுக்கொண்டார்.
வாக்குகள்
இதுவரையில் எலான் மஸ்க்-ன் இந்த POLL-க்கு 2,852,784 வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 73.4 சதவீதம் பேர் டிவிட்டர் பதிவை எடிட் செய்யும் ஆப்ஷன் வேண்டும் எனப் பதில் அளித்துள்ளனர். 26.6 சதவீதம் பேர் மட்டுமே வேண்டாம் எனத் தெரிவித்துள்ளனர்.
Elon Musk polls on Twitter Edit Button, CEO Parag Agrawal Warns
Elon Musk polls on Twitter Edit Button, CEO Parag Agrawal Warns சேட்டையைத் துவங்கிய எலான் மஸ்க்.. டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் டிவீட்..!