சேலம் மாவட்டத்தில் வரத்து முழுமையாக குறைந்துள்ளதால் ஒரு கிலோ சிவப்பு மிளகாய் 300 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள், ஆந்திராவில் இருந்து குவிண்டால் அடிப்படையில் மிளகாய் வத்தல் கொள்முதல் செய்து வந்து விற்பனை செய்து வரும் நிலையில் தற்போது மிளகாய் வரத்து குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட, முதல் ரக மிளகாய் வத்தல்களில் ஒன்றான சிறிய மிளகாய், தற்போது விலை உயர்ந்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக கூடுதலாக கட்டணம் கேட்பதால் பொருட்களின் விலை உயர்வதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.