ஜேர்மனியில் ரஷ்ய மற்றும் உக்ரேனிய புலம்பெயர்ந்தோருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் Nancy Faeser தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய நாள் முதல் ஜேர்மனியில் ரஷ்ய மற்றும் உக்ரேனிய புலம்பெயர்ந்தோருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக Faeser குறிப்பிட்டுள்ளார்.
Faeser கூறுகையில், பிப்ரவரி மாத இறுதியில் இருந்து 15 வன்முறை செயல்கள் உட்பட ரஷ்யர்களுக்கு எதிராக 308 குற்றங்கள் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ரஷ்யர்கள் மற்றும் ரஷ்ய சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
புடின் படையெடுப்பைத் தொடங்குவதற்கு முன்பு சுமார் 2,50,000 ரஷ்யாவில் பிறந்த புலம்பெயர்ந்தோர் மற்றும் உக்ரைனில் பிறந்த 1,50,000 பேர் ஜேர்மனியில் வாழ்ந்து வருகின்றனர்.
ரஷ்யாவின் படையெடுப்பால் 3,00,000க்கும் மேற்பட்ட உக்ரேனியர்கள் ஜேர்மனிக்கு தப்பி வந்துள்ளனர்.
உக்ரேனியர்களுக்கு எதிரான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன, பிப்ரவரி மாத இறுதியில் இருந்து 109 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதில் உடல் ரீதியான தீங்கு போன்ற 13 வன்முறைச் செயல்கள் அடங்கும்.
குழந்தைகள் உடல்களில் தொடர்பு எண்களை எழுதும் உக்ரேனிய தாய்மார்கள்! நெஞ்சை உருக்கும் காரணம்
பெரும்பாலான குற்றங்கள் சொத்து சேதம், அவமதிப்பு மற்றும் வாய்மொழி அச்சுறுத்தல்கள் ஆகும்.
இந்த மோதல் நம் சமூகத்தில் ஊடுருவ அனுமதிக்கக்கூடாது. இது ஜேர்மனியில் வாழும் ரஷ்ய வம்சாவளியை கொண்ட மக்களின் போர் அல்ல.
இது புடினின் கிரிமினல் போர் என்பதை நாம் மக்களுக்கு நினைவூட்ட வேண்டும் என ஜேர்மன் உள்துறை அமைச்சர் Nancy Faeser கூறினார்.