சான் பிரான்சிஸ்கோ -‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தின், 9.2 சதவீத பங்குகளை வாங்கியுள்ளார், உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான, தொழிலதிபர் எலான் மஸ்க்.’டெஸ்லா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் டுவிட்டர் சமூக வலைதளத்தின், 9.2 சதவீத பங்குகளை அவர் வாங்கியுள்ளார். அதாவது அந்நிறுவனத்தின், 7.35 கோடி பங்குகளை அவர் வாங்கியுள்ளார்.பங்குச் சந்தையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இதை அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் வாயிலாக டுவிட்டர் நிறுவனத்தின் மிகப் பெரிய முதலீட்டாளராக அவர் விளங்குகிறார்.எலான் மஸக், டுவிட்டர் சமூக வலைதளம் குறித்து பல விமர்சனங்களை முன் வைத்திருந்தார். அவர், தனியாக சமூக வலை தளத்தை துவக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டுவிட்டரின் பங்குகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சான் பிரான்சிஸ்கோ -‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தின், 9.2 சதவீத பங்குகளை வாங்கியுள்ளார், உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான, தொழிலதிபர் எலான் மஸ்க்.’டெஸ்லா’ நிறுவனத்தின் தலைமை செயல்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.