புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் உள்ள 3 முக்கிய மாநகராட்சிகளையும் ஒரே மாநகராட்சியாக இணைக்க வகை செய்யும் டெல்லி மாநகராட்சி திருத்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
டெல்லியில் தற்போது வடக்கு, தெற்கு, கிழக்கு என மூன்று மாநகராட்சிகள் உள்ளன. இதில் வடக்கு, தெற்கில் தலா 104 வாா்டுகளும், கிழக்கில் 64 வாா்டுகளும் என மொத்தம் 272 வாா்டுகள் உள்ளன.
இந்நிலையில், இந்த 3 மாநகராட்சிகளையும் ஒன்றிணைக்கும் டெல்லி மாநகராட்சி (திருத்தம்) சட்டம்- 2022 மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தாக்கல் செய்து பேசினார்.
இதையும் படியுங்கள்…இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்தது அமலாக்கத்துறை