தங்கம் விலை சற்றே குறைவு.. முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் தான்.. எவ்வளவு குறைந்திருக்கு?

தங்கம்(gold) விலையானது சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் இன்றும் சற்று சரிவில் காணப்படுகின்றது.

இதற்கிடையில் இந்திய சந்தையில் என்ன நிலவரம்?ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? இந்த சரிவானது இப்படியே தொடருமா? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? டெக்னிக்கலாக எப்படி உள்ளது? நிபுணர்களின் கணிப்பு என்ன?

மீடியம் டெர்மில் வாங்காலாமா? வேண்டாமா? முக்கிய லெவல்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

முதல் நாளே சர்பிரைஸ் தான்.. தங்கம் விலை குறைந்திருக்கு..எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

தடுமாற்றத்தில் தங்கம் விலை

தடுமாற்றத்தில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்றே தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்றே சரிவில் தான் காணப்படுகின்றது. எனினும் தங்கத்தின் விலையினை ஊக்குவிக்கும் விதமாக டெக்னிக்கலாக நீண்டகால நோக்கில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகின்றது. குறிப்பாக தங்கம் விலையானது தொடர்ந்து 1900 டாலர்களுக்கு மேலாகவே இருந்து வருகின்றது.

டாலர் மதிப்பு சரிவு

டாலர் மதிப்பு சரிவு

தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான அமெரிக்க டாலரின் மதிப்பானது சற்றே சரிவில் காணப்படுகின்றது. இது தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம். இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக பத்திர சந்தையும் தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. ஆக இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு முதலீடுகளை மாற்ற வழிவகுக்கலாம்.

பொருளாதார பேரழிவு
 

பொருளாதார பேரழிவு

தொடர்ந்து பல கட்டமாக உக்ரைன் – ரஷ்யா இடையேயான பேச்சு வார்த்தை என்பது நடந்து வந்தாலும், இன்று வரையில் சமாதானம் ஏற்பட்டதாக தெரியவில்லை. இதற்கிடையில் அப்பாவி மக்கள் பலரும் இந்த போரில் இறந்துள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டி வருகின்றது. ஆனால் இதனை மறுத்துள்ள ரஷ்யா, இது தொடர்பான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. இது மேலும் இவ்விரு நாடுகளுக்கு இடையே சல சலப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இந்த போர் இப்போதைக்கு முடிவுக்கு வருமா? என்ற பெரும் கேள்வியும் எழுந்துள்ளது. மொத்தத்தில் விலைமதிப்பில்லாத உயிர்களை மட்டும் அல்லாது, பொருளாதாரத்திலும் பேரழிவினை ஏற்படுத்தியுள்ளது.

பணவீக்கம்

பணவீக்கம்

இவ்விரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில், தொடர்ந்து ரஷ்யாவின் மீது பல நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றது. இது சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சப்ளை சங்கிலியில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக, பணவீக்கமானது மிக மோசமான ஒன்றாக மாறியுள்ளது.

ஃபெடரல் மத்திய வங்கி என்ன செய்யபோகிறது?

ஃபெடரல் மத்திய வங்கி என்ன செய்யபோகிறது?

ஏற்கனவே பணவீக்கமானது அமெரிக்காவில் மோசமான உச்சத்தினை தொட்டிருந்த நிலையில், அதனை குறைக்க அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கும் நடவடிக்கையினை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வரவிருக்கும் நாணய கொள்கை கூட்டத்தில் நிச்சயம் மிகப்பெரிய அளவில் வட்டி அதிகரிப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது குறித்த முக்கிய அறிவிப்பினை முதலீட்டாளர்கள் மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

தடை அதிகரிக்கப்படுமா?

தடை அதிகரிக்கப்படுமா?

ரஷ்யா மீது ஏற்கனவே பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இது மோசமான பணவீக்கத்தினை தூண்டியுள்ளது. இதற்கிடையில் இன்னும் தடைகள் அதிகரிக்கலாமோ என்ற நிலையே இருந்து வருகின்றன. குறிப்பாக ரஷ்யாவின் எரிபொருள் வணிகத்தில் சில நாடுகள் மட்டுமே தடை செய்துள்ள நிலையில், மற்ற நாடுகளும் தடை செய்தால், அது சர்வதேச அளவில் மிக மோசமான விளைவினை ஏற்படுத்தும். இது மேற்கொண்டு பணவீக்கம் உச்சம் தொட காரணமாக அமையலாம்.

மீடியம் டெர்மில் குறையலாம்

மீடியம் டெர்மில் குறையலாம்

தங்கத்தின் அடுத்த முக்கிய சப்போர்ட் 1910 டாலர்கள் என்ற நிலையில், அதன் முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 1940 டாலர்களாகவும் உள்ளது. இதற்கிடையில் டெக்னிக்கலாக பார்க்கும்போது தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் நேற்றைய உச்ச விலையை உடைத்தால் மீண்டும் அதிகரிக்கலாம் என்றாலும், மீடியம் டெர்மில் விலை குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று சரிவில் காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸுக்கு 4.70 டாலர்கள் குறைந்து, 1929.25 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் சற்று அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம். எனினும் வட்டி விகிதம் தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றத்தினை கொடுக்கலாம்.

சர்வதேச வெள்ளி விலை

சர்வதேச வெள்ளி விலை

தங்கம் விலையை போலவே, வெள்ளியின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 0.13% குறைந்து, 24.558 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. இதற்கிடையில் வெள்ளி விலையும் மீடியம் டெர்மில் சற்று அழுத்தத்தினை கண்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்தவரையில், தங்கம் விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக சரிவிலேயே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 13 ரூபாய் குறைந்து, 51,520 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று தொடக்கத்தில் கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 26 ரூபாய் குறைந்து, 66,269 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும், ஆபரணத் தங்கத்தின் விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது சென்னையில் கிராமுக்கு 13 ரூபாய் அதிகரித்து, 4816 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்து, 38,528 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 14 ரூபாய் அதிகரித்து, 5254 ரூபாயாகவும், இதுவே 8 கிராமுக்கு 112 ரூபாய் அதிகரித்து, 42,032 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 52,540 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை

வெள்ளி விலை

சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது பெரியளவில் மாற்றமின்றி சற்று குறைந்து காணப்படுகின்றது. இன்றும் கிராமுக்கு 40 பைசா குறைந்து, 71 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 710 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து, 71,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதுவே நீண்டகால நோக்கில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். இது பணவீக்கம் குறித்தான தரவு, ஃபெடரல் வட்டி விகிதம், டாலர் மதிப்பு, ரஷ்யா – உக்ரைன் பேச்சு வார்த்தை உள்ளிட்ட பல காரணிகள் விலையில் முக்கிய மாற்றத்தினை ஏற்படுத்தலாம். ஆபரணத் தங்கத்தினை பொறுத்தவரையில் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on April 5th, 2022: gold prices down today; investors focus on Federal commentary

gold price on April 5th, 2022: gold prices down today; investors focus on Federal commentary/தங்கம் விலை சற்றே குறைவு.. முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் தான்.. எவ்வளவு குறைந்திருக்கு?

Story first published: Tuesday, April 5, 2022, 11:13 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.