தங்கம் விலையானது மூன்றாவது நாளாக இன்று சரிவினைக் கண்டுள்ளது. இது மீடியம் டெர்மில் இன்னும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது.
இதற்கிடையில் சமீபத்தில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 55,558 ரூபாய் உச்சத்தினை எட்டியது. இந்த நிலையில் இன்று 51,460 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது.
சமீபத்திய உச்சத்தில் இருந்து 10 கிராமுக்கு 4000 ரூபாய்க்கு மேலாக சரிவில் காணப்படுகின்றது.
விலைவாசி ஏறிவிட்டது.. இந்தாங்க 74000 ரூபாய், ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலாளி..!
தங்கம் விலை சரிவு
இது அமெரிக்க டாலரின் மதிப்பானது ஆரம்பத்தில் சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், தற்போது 98.96 டாலராக வலுவடைந்துள்ளது. இதற்கிடையில் தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படுகின்றது. இன்று பத்திர சந்தையும் வலுவடைந்து காணப்படுகின்றது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைய வாய்ப்புகள் உள்ளது.
தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்
எனினும் ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள், இன்னும் சில தடைகள் விதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் எண்ணெய் மற்றும் கேஸ் மீது தடையை விதிக்கலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இப்படி தடை விதிக்கப்பட்டால், அது எரிபொருள் விலையில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது பணவீக்கத்தினை ஊக்குவிக்கலாம். இது பணவீக்கத்திற்கு எதிராக சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
முக்கிய சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்
தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவலானது 1917 – 1905 டாலர்களாகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவலாக 1938 – 1949 டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதே வெள்ளியின் சப்போர்ட் லெவலானது 24.20 – 23.92 டாலர்களாகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவலாக 24.65 – 25 டாலர்களாகவும் உள்ளது.
இதே இந்திய சந்தையில் தங்கத்தின் முக்கிய சப்போர்ட் விலையானது 10 கிராமுக்கு 51,220 – 50,980 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 51,880 – 52,085 ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதே வெள்ளியில் சப்போர்ட் 65,850 – 65,280 ரூபாயாகவும், ரெசிஸ்டன்ஸ் லெவல் 67,100 – 67,510 ரூபாயாகவும் விபி கமாடிட்டிஸ் நிறுவனத்தின் ஆய்வாளர் கணித்துள்ளார்.
பங்கு சந்தைகள் குழப்பம்
ஐரோப்பிய ஒன்றியம் நிலக்கரி இறக்குமதியினை ரஷ்யாவில் இருந்து தடை செய்ய தட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் சர்வதேச ஈக்விட்டி சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றது.ரஷ்யாவின் மோசமான தாக்குதலை அடுத்து, சர்வதேச நாடுகள் பலவும் ரஷ்யாவுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றன.
முதலீடுகள் அதிகரிக்கலாம்
நடப்பு ஆண்டின் முதல் காலாண்டிலேயே தங்கம் விலையானது வலுவான வளர்ச்சியினை கண்டது. இந்த நிலையில் தற்போதும் அரசியல் பதற்றமானது நீண்டு கொண்டுள்ளது. இது பணவீக்கத்தினை ஊக்குவிக்கலாம். இது இடிஎஃப்-லும் முதலீட்டினை ஊக்குவிக்கலாம். இது தங்கத்திற்கு ஆதரவாக இருக்கலாம்.
பொருளாதார சரிவு
மேலும் வரவிருக்கும் மத்திய வங்கி கூட்டத்தில் பத்திரம் வாங்குதலை குறைக்கலாம். இதுவும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். சீனாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், லாக்டவுன் நடவடிக்கையானது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகின்றது. இதுவும் சர்வதேச பொருளாதாரத்தினை மேம்படுத்தலாம்.
gold prices fall for 3rd day in a row, down Rs.4000 in a month, is it a right time to buy?
gold prices fall for 3rd day in a row, down Rs.4000 in a month, is it a right time to buy?/தங்கம் விலை ரூ.4000 சரிவு.. 3வது நாளாக வீழ்ச்சி.. இன்னும் குறையுமா?