இந்திய பங்கு சந்தைகள் நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தினை தரும் விதமாக சற்று சரிவில் காணப்படுகின்றது.
எனினும் கடந்த அமர்வில் மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்ட நிலையில், இன்று முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இந்த சரிவானது இப்படியே தொடருமா? அல்லது மீண்டும் ஏற்றம் காணுமா? கவனிக்க வேண்டிய பங்குகள் என்ன? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? சர்வதேச சந்தைகளின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
1100 புள்ளிகளுக்கு மேல் எகிறிய சென்செக்ஸ்.. துள்ளிக் குதிக்கும் முதலீட்டாளர்கள்..!
சர்வதேச சந்தைகள்
கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சற்று ஏற்றத்தில் தான் முடிவடைந்துள்ளன. இதற்கிடையில் இன்று காலை தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்திலேயே தொடங்கியுள்ளன. எனினும் இந்தியாவின் வர்த்தக பற்றாக்கூறையானது கடந்த நிதியாண்டில் 88% அதிகரித்து 192.41 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் இந்தியய் சந்தையானது இன்று சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது.
அன்னிய முதலீடுகள்
கடந்த ஏப்ரல் 4 நிலவரப்படி, அன்னிய முதலீட்டாளர்கள் 1152.21 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 1675.01 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர் என என்.எஸ்.இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. கடந்த சில தினங்களாகவே மீண்டும் இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இது சந்தைக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
தொடக்கம் எப்படி?
இன்று காலம் ப்ரீ ஓபனிங்கிலேயே சென்செக்ஸ் 248.83 புள்ளிகள் அதிகரித்து, 60,860.57 புள்ளிகளாகவும், நிஃப்டி 5.90 புள்ளிகள் அதிகரித்து, 18,059.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ்20.30 புள்ளிகள் குறைந்து, 60,591.44 புள்ளிகளாகவும், நிஃப்டி 4.90 புள்ளிகள் அதிகரித்து, 18,058.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1795 பங்குகள் ஏற்றத்திலும், 366 பங்குகள் சரிவிலும், 67 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
கவனிக்க வேண்டிய பங்குகள்
இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் பட்டியலில் யெஸ் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, மாருதி சுசுகி, சோமேட்டோ உள்ளிட்ட பங்குகள் கவனிக்க வேண்டிய் பங்குகளில் ஒன்றாக உள்ளது.
இதற்கிடையில் டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், ஹெச்.டி.எஃப்.சி , ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ரிலையன்ஸ் அதிக ஏற்ற இறக்கமுள்ள பங்குகளாக உள்ளன.
இன்டெக்ஸ் நிலவரம் & நிஃப்டி குறியீடு
இன்டெக்ஸில் நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. மற்றவை பெரிய மாற்றமில்லாமல் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், ஈச்சர் மோட்டார்ஸ், யுபிஎல், ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் பைனான்ஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஹெச்.டி.எஃப்.சி, பஜாஜ் பின்செர்வ், கோடக் மகேந்திரா உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள எம்&ஏம், டெக் மகேந்திரா, பவர் கிரிட் கார்ப், மாருதி சுசுகி, டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் பைனான்ஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஹெச்.டி.எஃப்.சி, பஜாஜ் பின்செர்வ், கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம் என்ன?
பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சற்று தடுமாற்றத்தில் தொடங்கிய சந்தையானது, தற்போது 9.47 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 292.69 புள்ளிகள் குறைந்து, 60,319.05 புள்ளிகளாகவும், நிஃப்டி 71.7 புள்ளிகள் குறைந்து, 17,981.70 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
opening bell: indices open flat on mixed global cues; focus in yes bank, SBI, TCS
opening bell: indices open flat on mixed global cues; focus in yes bank, SBI, TCS/தடுமாறும் சென்செக்ஸ், நிஃப்டி.. கவனிக்க வேண்டிய யெஸ் வங்கி, எஸ்பிஐ, டிசிஎஸ்..!