டெல்லி: தமிழக வெள்ள நிவாரணத்திற்காக ரூ.566.36 கோடி வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
கடந்த வாரம் டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் பரிதமர் மோடியை சந்தித்து பேசினார்,. அப்போது தமிழகத்தின் மிக முக்கியமான 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் நான் வழங்கினேன். அந்தக் கோரிக்கைகளில் இருக்கக்கூடிய முக்கியத்துவத்தை அவரிடம் நான் தெளிவாக எடுத்துரைத்ததாகவும் கூறியிருந்தார். அந்த கோரிக்கை மனுவில் வெள்ளநிவாரணம், ஜிஎஸ்டி இழப்பீடு உள்பட பல்வேறு கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.
இதுதொடர்பாக மக்களைவில் இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய், தமிழக வெள்ள நிவாரணத்திற்காக இதுவரை ரூ.566.36 கோடி வழங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.