சென்னை: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாயையும், டீசல் விலை 100 ரூபாயையும் கடந்து சதம் அடித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் விலைவாசிகளும் கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.
இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 காசுகள் உயர்த்தப்பட்டு, 110 ரூபாய் 09 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 76 காசுகள் உயர்த்தப்பட்டு 100 ரூபாய் 18 காசுகளுக்கு விற்பனையாகிறது. டீசல் விலை முதன்முறையாக ஒரு லிட்டர் நூறு ரூபாயை தாண்டியுள்ளது.
டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வணிக நிறுவனங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டீசல் விலை உயர்வால், கனரக வாகனங்களின் வாடகை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உணவுப்பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களின் விலைவாசிகளும் உயரும் நிலை உருவாகி உள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ரூ.100 கடந்தது பெட்ரோல் விலை….