இந்தியன் ரிகார்டு உற்பத்தி நிறுவனம், சமீபத்தில் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. அதில், ‘
இளையராஜா
இசை அமைத்த 20 தமிழ் படங்கள் மற்றும் இதர மொழிகளில் வெளியான சில படங்களுக்கு, தயாரிப்பாளர்களிடம் இருந்து பதிப்புரிமை பெற்றுஉள்ளோம். ஆகவே, இந்த படங்களின் இசையை பயன்படுத்த, இளையராஜாவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தது.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், குறிப்பிட்ட படங்களுக்கான இசையை பயன்படுத்த, இளையராஜா மற்றும் இரண்டு மியூசிக் நிறுவனங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, இளையராஜா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தற்போது இது குறித்து பதில் அளிக்கும்படி இந்தியன் ரிக்கார்டு உற்பத்தி நிறுவனம் உள்ளிட்ட மூன்று இசை நிறுவனங்களுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
திரைப்படத்தின் இசைக்கு உரிமையாளர்கள்,
தயாரிப்பாளரா
, இசை அமைப்பாளரா என்கிற விவாதம், சட்ட முறைகளையும் தாண்டி தொடர்ந்து நடந்துவருகிறது. ‘2017ம் ஆண்டு.. எஸ்.பி.பாலசுப்பிரமணியம், அமெரிக்காவல் இசை நிகழ்ச்சி நடத்திக் கொண்டு இருந்தார். அப்போது ‘இளையராஜா, தான் இசையமைத்த திரைப்பாடல்களை மேடைகளில் பாடக்கூடாது என்று எஸ்.பி.பி.க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து எஸ்.பி.பி., “இந்த சட்டநடைமுறை குறித்து எனக்குத் தெரியாது. இனி இளையராஜா இசையில் உருவான பாடல்களையும், இளையராஜா இசையில் நான் பாடியது உட்பட எந்தப்பாடலையும் தான் மேடையில் பாடமாட்டேன்” என்றார்.
விவாதத்திற்கு வித்திட்ட கேள்கள்
இளையாஜாவின் இந்த செயல், கலவையானதுமான, பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியது. “திரைத்துறைக்கு வருவதற்கு முன் இளையராஜாவும் மேடைக் கச்சேரி நடத்தித்தானே சம்பாதித்தார். அப்போது எம்.எஸ்.வி, மகாதேவன் உள்ளிட்டவர்களின் பாடல்களைப் பாடினாரே. பாடலாசிரியர், பாடகர், இசைக்கருவிகள் மீட்டுபவர்கள் என பலரும் இருக்கும்போது இசை அமைப்பாளர் மட்டும் எப்படி பாடலுக்கு உரிமை கோர முடியும்? தவிர இவர்களுக்கான ஊதியத்தை தயாரிப்பாளர் அளப்பதால் அவர்தானே உரிமையாளர்? பல படங்களில் நமது பாரம்பரிய கிராமிய இசையை அப்படியே பயன்படுத்துகிறார்கள் இசை அமைப்பாளர்கள். அதற்காக யாருக்கு ராயல்டி கொடுக்கிறார்கள்? – இப்படி பல கேள்விகள் வந்து பெரும் விதாத்ததை ஏற்படுத்தின.
இதுதொடர்பாக, இசையமைப்பாளர் இளையராஜாவின்
காப்புரிமை
ஆலோசகர் பிரதீப் விளக்கம் அளித்தார். அவர், “எஸ்.பி.பி. அவர்களையோ மற்றவர்களோ, இளையாராஜா இசை அமைத்த பாடல்களை பாடக்கூடாது என சொல்லவில்லை. உரிய அனுமதியை பெற்று பாடுங்கள் என்றே கூறுகிறோம். இது கிராமங்களில் கச்சேரி நடத்தும் எளிய பாடகர்களுக்கு பொருந்தாது. வருமான நோக்கோடு கச்சேரி செய்து வருமானம் ஈட்டுபவர்களிடம் உரிமையை கேட்கிறோம்” என்றார். மேலும், “தான் இசை அமைத்த பாடல்களுக்கான உரிமையிலிருந்து கிடைக்கும் தொகையை பாடகர், இசைக்கருவிகள் இசைப்பவர்களுக்கும் பிரித்தளிக்கவே இளையாராஜா திட்டமிட்டுள்ளார்” என்றார்.
இந்திய சட்டம் – காப்புரிமை சட்டம் என்ன சொல்கிறது?
வழக்கறிஞர் அருள் துமிலன்
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அருள் துமிலன், “இந்திய சட்டத்தைப் பொறுத்தவரை, இசை அமைப்பாளருக்குத்தான் பாடலின் உரிமை உள்ளது என்றார். மேலும், மேற்கத்திய நாடுகளில் திரைப்படங்களில் பாடல் கிடையாது. தனி இசை ஆல்பங்கள்தான். அவற்றை பாடுபவரே இசை அமைப்பார், பெரும்பாலும் பாடலையும் எழுதி விடுவார். தயாரிப்பாளராகவும் அவரே இருப்பார்.
உதாரணமாக , மறைந்த இடசை பாடகர் மக்கேல் ஜாக்ச-ஐ குறிப்பிடலாம். ஆகவே இசை அமைப்பாளருக்கே முழு உரிமை என்கிற சட்டம் அங்கே உண்டு. ஆனால் இங்கே படத் தயாரிப்பாளரிடம் சம்பளம் பெற்ற பிறகு, இசை அமைப்பாளரோ இதரரோ உரிமை கோருவது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு, ஒரு தெளிவான முடிவு – சட்டரீதியாக எட்ட வேண்டியது அவசியம்” என்கிறார் வழக்கறிஞர் அருள் துமிலன்
இந்த எண்ணமே தவறு.
1976ம் ஆண்டு, அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கணினி மென்பொருள் சிலவற்றை உருவாக்கி இருந்தார். அதை பலரும் பணம் தராமல் பிரதி எடுத்து பயன்படுத்தினர். அப்படி பயன்படுத்துவது தவறில்லை என்கிற மனோபாவமே பலருக்கும்! அந்த இளைஞர், மென்பொருள் காப்புரிமைக்காக தொடர்ந்து போராடினார். அவருக்கு வெற்றி கிடைத்தது. அந்த இளைஞர் தான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்கிய பில்கேட்ஸ். பிறகு காலமாற்றத்தில் பணம் கொடுத்து மட்டுமல்ல, இலவச சாப்ட்வேர்களும் கிடைக்கின்றன.
ஆக, காப்புரிமை என்பது அவசியம். இலவசம் என்பது ஏதுமில்லை. இதை அனைவரும் உணரவேண்டும்.
விமர்சகர்,
டிவி சோமு