தமிழக சட்டப்பேரவையில் நாளை முதல், துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
மார்ச் 18ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இவற்றின் மீதான விவாதங்கள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக, துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர், நாளை முதல் அடுத்த மாதம் பத்தாம் தேதி வரை வரை நடைபெறவுள்ளது. நாளை நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும், நாளை மறுநாள் நகராட்சி நிர்வாகம் துறை மீதான விவாதமும் நடைபெற உள்ளது. சொத்துவரி உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில், கடந்த நிதியாண்டில் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், இந்த நிதியாண்டின் மானியக் கோரிக்கையில் துறை வாரியாக அறிவிக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.
சமீபத்திய செய்தி: `மெட்ராஸ்’ பட பாணியில் சுவர் பிரச்னை: கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகர்; வழக்கறிஞர் கைதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM