இஸ்லாமாபாத்: தேர்தலுக்கு தயாராகுங்கள் என தனது கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார் பாக். முன்னாள் பிரதமர் இம்ரான்கான்.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் , முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் அரசு மீது, நவாஸ் ஷெரீபின் முஸ்லிம் லீக், பாக். மக்கள் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பார்லி.,யில் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவித்த துணை சபாநாயகர் காசிம் சுரி, பார்லி.,யை வரும் 25க்கு ஒத்திவைத்தார். பார்லி.கலைக்கப்பட்டது. 3 மாதத்தில் தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டது.
பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இம்ரான் கான் வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசியுள்ளார். அதில், நாடு சந்திக்கப்போகும் பொது தேர்தலுக்குத் நீங்கள் இப்போதே தயாராக வேண்டும். சுயநலமில்லாத, நேர்மையான, தியாக சிந்தனை கொண்டவர்களை தான் வரப்போகும் தேர்தலில் நிறுத்துவேன்.
இந்த தேர்தலில் நாம் வெற்றி பெற்று வெளிநாட்டு சதியில் ஈடுபட்டவர்களுக்கு பாடம் புகட்டுவோம் என்றார்.
உச்சநீதிமன்றம் மறுப்பு
பாக். பார்லிமென்ட் கலைக்கப்பட்டதை எதிர்த்தும், அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என எதிர்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் தொடந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் அரசின் கொள்கை முடிவிலும், அரசியலமைப்பு சட்டத்திலும் சுப்ரீம் கோர்ட் தலையிட முடியாது என கூறியது.
Advertisement