உக்ரைனில் நாம் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே பல அப்பாவி உயிர்கள் பலியாகி இருக்கின்றன என ஐக்கிய நாடுகள் சபையின் அயர்லாந்து தூதர் ஜெரால்டின் பைர்ன் நாசன் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்யா 41வது நாளாக போர்த்தாக்குதலை நடத்திவரும் நிலையில், ரஷ்ய ராணுவம் பல மனித உரிமை மீறல்களையும் போர் விதிமீறல்களையும் புரிந்து இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
அந்தவகையில், உக்ரைனின் புச்சா நகரின் தெருக்களில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டு கிடக்கும் காட்சிகள் வெளியாகி உலகநாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“So many innocent lives lost on our watch,” Ireland’s UN representative Geraldine Byrne Nason has said after Zelenskyy’s address.
She added: “Attempts to deny Russian responsibility [for atrocities against Ukrainian are appalling in their cynicism.” pic.twitter.com/jnOUh4ghud
— TheJournal.ie (@thejournal_ie) April 5, 2022
இந்தநிலையில், ரஷ்யாவின் இந்த போர் விதிமீறல்கள் குறித்து ஐக்கியநாடுகள் சபையில் காணொளி வாயிலாக உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, உக்ரைன் மறைமுக அடிமையாக இருக்க வேண்டும் என ரஷ்யா விரும்புவதாக தெரிவித்தார்.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் உரையை தொடர்ந்து பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் அயர்லாந்து தூதர் ஜெரால்டின் பைர்ன் நாசன் “நாம் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே உக்ரைனில் பல அப்பாவி உயிர்கள் பலியாகி இருக்கின்றன” என தெரிவித்தார்.
மேலும் உக்ரைனில் ரஷ்ய ராணுவம் புரிந்துள்ள அத்துமீறல்களை ஏற்க மறுப்பது என்பது ரஷ்யா அதன் பொறுப்புகளை மறுக்கும் சிடுமூஞ்சித்தனத்தை காட்டுவதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
உலகப் போர் காலத்து துப்பாக்கி… பசிக்கு குளத்து நீர்: உக்ரைனில் ரஷ்ய துருப்புகளின் நிலை