நாகையில் தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவியின் சடலத்தை ஒரு வார கால போராட்டதிற்கு பிறகு பெற்றுக்கொண்ட உறவினர்கள், கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டு நாகை முதல் நாகூர் வரை ஆம்புலன்ஸில் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிசியோதெரபிஸ்ட் பயின்று வந்த சுபாஷினி கல்லூரி கட்டணம் செலுத்தாதற்காக வெளியே நிற்க வைக்கப்பட்டார் என்றும் அதனால் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவியின் உடலை வாங்காமல் 6 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வந்த நிலையில், நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின் இன்று மாணவியின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.