நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், நாடாளுமன்றத்திற்கு வெளியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக நாடாளுமன்றத்திற்கு எதிரே உள்ள ஒரு பாதை மூடப்பட்டுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன.
ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்து மக்கள் பாரிய எதிர்பார்ப்புடன் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.