நாட்டின் தற்போதைய நிலை தொடர்பான பாராளுமன்ற விவாதம் மேலும் இரண்டு தினங்களுக்கு நடைபெறவுள்ளது.
.பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் இன்று பாராளுமன்றம் கூடியது.
தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காணப்பதற்கான யோசனைகள் இதன் போது முன்வைக்கப்பட்டன.
பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்குச் செல்லுமாறு யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் சில கட்சிகளின் பிரதிநிதிகள் இதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.
இதேவேளை, இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் எந்தவித இணக்கப்பாடுமின்றி முடிவடைந்தது.
கட்சிகள் அல்லது குழுக்களாகப் பிரிந்து பல்வேறு கருத்துக்களுடன் மக்களை பாதிப்பிற்கு உள்ளாக்காது அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென்றும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் மாத்திரமே மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றும் அவர் இன்று பாராளுமன்றத்தில் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.