புதுடெல்லி: தேசிய பங்குச் சந்தை மோசடி தொடர்பாக, முன்னாள் தலைமை செயல் அதிகாரிகளான சித்ரா ராமகிருஷ்ணா, ரவி நரேன் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் நிதியமைச்சர் சின்ஹா தலைமையிலான குழு, ஆரம்ப பொது வழங்கல்கள், சர்வதேச நிதிச் சேவை மையங்கள் மற்றும் மாற்று முதலீட்டு நிதி தொடர்பான ஒழுங்குமுறை சிக்கல்கள், சமீபத்திய ஏற்றம், இறக்கம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க செபியின் தலைவர் மாதபி பூரி புச்சுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நேற்று செபியின் தலைவர் புச், நாடாளுமன்ற குழு முன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.அப்போது, மேற்கண்ட செயல்பாடுகள் மற்றும் பங்கு சந்தை மோசடி தொடர்பான விசாரணை ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒரே வாரத்தில் நாடாளுமன்றக் குழுவுடன் செபி அதிகாரிகள் நடத்தும் இரண்டாவது சந்திப்பு இதுவாகும்.