வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆட்சி பொறுப்பேறற்றதிலிருந்து தமிழகத்தை இந்திய மாநிலங்களிலேயே முதன்மை மாநிலமாக மாற்றிவரும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வாழ்த்திப் பாராட்டுகிறேன். மேலும்கோடை விடுமுறை காலத்தில் பள்ளி நடைபெறக்கூடிய காலகட்டங்களில் பள்ளி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்.
கடந்த காலங்களை காட்டிலும் வெயிலின் உக்கிரம் இந்த வருடம் ஆரம்பத்திலேயே கூடுதலாக உள்ளது நாடு முழுதும் சுட்டெரிக்கும் வெய்யில் கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன்கருதி பள்ளிகள் இயங்கும் நேரம் சில மாநிலங்களில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆந்திராவில் பள்ளி நேரம் என்பது காலை 8 மணிக்கு தொடங்கி 11 மணிக்குள் நிறைவடைந்து விடுகிறது. அதேபோல கர்நாடகத்தில் தேர்வு வைத்து பள்ளிகளுக்கு விடுமுறை விட்டாச்சு.தமிழ்நாட்டில் இப்போதே வெய்யில் சதத்தைத் தாண்டியுள்ளது.
எதிர்வரும் காலங்களில் வெய்யில் உச்சத்தைத் தொடும். வெய்யிலின் தாக்கத்தினால் பல்வேறு சரும நோய்கள்,காய்ச்சலால் குழந்தைகளுக்கு சகஜத்தன்மை மாறுகின்றது. உடலும் உள்ளமும் ஒருசேர ஒழுங்காக இருந்தால் மட்டுமே கற்றலும் கற்பித்தலும் சிறப்பாக நடக்கும்.
தற்போது 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மே 13 வரைக்கும் 10 முதல் 12 வரை மே 30 வரை திட்டமிடபட்டுள்ளது. வெய்யிலின் கோரத்தாண்டவத்தை சமாளிக்கும் வகையில் மே மாதம் தேர்வு முடியும் வரை பள்ளி நேரத்தைகாலை 7.30 லிருந்து 12.30 வரை மாற்றியமைத்து மாணவர்களை பேணும்படி முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன் என தெரிவித்துள்ளார்.