கோவை: பாரத_கவுரவ_ரெயில் திட்டத்தின்படி, கோவை-ஷீரடி இடையே முதல் தனியார் ரெயிலுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஐஆர்சிடிசி ராமாயாணா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கி வரும் நிலையில், தற்போது தெற்கு ரயில்வேயில் இருந்து, முதல் ரயிலாக கோவை ஷீரடி ரயில் சேவை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயின் முதல் பாரத் கவுரவ் ரயில், தெற்கு ரயில்வேயின் கோயம்புத்தூர் – ஷீரடி பிரிவில் இயக்கப்படுகிறது. இந்த கோயம்புத்தூர்-ஷீரடி ரயில் சேவை பிரிவு மே 2022க்குள் செயல்படத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத் கவுரவ் ரெயில் திட்ட பாலிசி என்றால் என்ன?
பாரத் கவுரவ் பாலிசி என்பது எந்த ஒரு ஆப்பரேட்டரும், சேவை வழங்குநரும் (அதாவது யார் வேண்டுமானாலும்) ஒரு ரயிலை இந்திய ரயில்வே யிடம் இருந்து குத்தகைக்கு எடுத்து ஒரு சிறப்பு சுற்றுலாத் தொகுப்பாக ஒரு தீம் அடிப்படையிலான சர்க்யூட்டில் இயக்க முடியும். இதன் குறைந்தபட்ச குத்தகை காலம் 2 வருடங்கள். அதிகபட்சமாக பெட்டியின் கோடல் லைஃப் வரும் வரை இயக்க இயலும். வழிகள், தேவைப்படும் நிறுத்தங்கள், சேவைகள், கட்டணம் போன்றவற்றை தீர்மானிக்கும் சுதந்திரம் ஆப்பரேட்டர்களுக்கு உண்டு.
இது போன்ற பயணங்களில் பயணிகள் ஒரு இடத்தில் இறங்கி ஹோட்டல்களில் தங்கி அங்கே இருக்கும் பகுதிகளை சுற்றிப்பார்த்து பல செயல்பாடுகளில் ஈடுபடுவார். இவை அனைத்தும் டூர் ஆப்பரேட்டர்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது. பாரத் ஆப்பரேட்டர் இதே போன்ற ஒரு வணிக முன்மாதிரியை முன்மொழிய வேண்டும். ரயில்களை இயக்குவதுடன் உள்ளூர் போக்குவரத்து, சுற்றிப் பார்ப்பது, உணவு, உள்ளூர் தங்குமிடங்கள் போன்றவற்றைக் கவனித்துக்கொள்ளும். இந்தப் பிரிவுக்காக ஒதுக்கப்பட்ட 3033 கன்வென்ஷனல் இன்டெக்ரல் கோச் ஃபேக்டரி-டிசைன் பெட்டிகளை குத்தகைக்கு எடுக்க ரயில்வேயை யார் வேண்டுமானாலும் அணுகலாம். உண்மையில், ஆபரேட்டர் அதைச் சாத்தியமானதாகக் கண்டால், அது இந்திய இரயில்வே உற்பத்திப் பிரிவுகளில் இருந்து ரேக்குகளை வாங்கி இயக்கலாம்.
ஒவ்வொரு ரயிலிலும் 14 முதல் 20 கோச்சுகள் ((இரண்டு காவலர் பெட்டிகள் அல்லது எஸ்எல்ஆர் உட்பட). இருப்பினும் ஹோட்டல்களில் தங்குதல் உள்ளூர் சுற்றுலா போன்ற அனைத்து ஏற்பாடுகளையும் ஆப்பரேட்டர் விரிவாக கவனித்துக் கொள்ள வேண்டும். பயணம் ஆரம்பமாகும் இடம் மற்றும் முடியும் இடம் என்று மற்ற ரயில் சேவைகளைப் போன்று இந்த ரயில் சேவையை பயன்படுத்த இயலாது.
இந்த திட்டத்தின்படி, ஏற்கனவே ஐ.ஆர்.சி.டி.சி ராமாயணா எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கி வருகிறது. இந்த ரயில் ராமருடன் தொடர்புள்ள சில முக்கிய இடங்களை இணைத்து சுற்றுலா சேவைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தற்போது இந்திய ரயில்வேயின் முதல் பாரத் கவுரவ் ரயில், தெற்கு ரயில்வேயின் கோயம்புத்தூர் – ஷீரடி பிரிவில் இயக்கப்படுகிறது.
நவம்பர் 2021 இல் தீம் அடிப்படையிலான பாரத் கௌரவ் ரயில்களை இந்திய இரயில்வே அறிமுகப்படுத்தியது. இந்த கருப்பொருளின் நோக்கம் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் அற்புதமான வரலாற்று இடங்களை இந்தியா மற்றும் உலக மக்களுக்கு பாரத் கௌரவ் ரயில்கள் மூலம் காட்சிப்படுத்துவதாகும். இந்தத் திட்டம், இந்தியாவின் பரந்த சுற்றுலாத் திறனைப் பயன்படுத்த, தீம் அடிப்படையிலான ரயில்களை இயக்க, சுற்றுலாத் துறையின் நிபுணர்களின் முக்கிய பலத்தைப் பயன்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட பாரத் கௌரவ் ரயில்களின் இந்த நோக்கத்திற்காக, இந்திய இரயில்வே AC-I, AC-II, AC-III, SL AC நாற்காலி கார், பேண்ட்ரி கார் மற்றும் SLR என பல்வேறு வகைகளில் ICF பெட்டிகளின் தொகுப்பை ஒதுக்கியுள்ளது.
இந்த பாரத் கவுரவ் ரயில்களில், ரயில்வேக்கு வருவாயைப் பயன்படுத்துவதற்கான உரிமை (ரேக்), இழுத்துச் செல்லும் கட்டணம், வெற்று இழுத்துச் செல்வதற்கான கட்டணம், நிலையான கட்டணங்கள் போன்ற வடிவங்களில் வருமானம் கிடைக்கும். பதிவுசெய்யப்பட்ட சேவை வழங்குநர்கள் வணிக மாதிரியை தீர்மானிக்க நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளனர். கருப்பொருள்கள், வழிகள், பயணத்திட்டம், கட்டணம் போன்றவை, பதிவுசெய்யப்பட்ட சேவை வழங்குநருக்கு பெயரிடும் உரிமைகள், மூன்றாம் தரப்பு விளம்பர உரிமைகள் மற்றும் பிராண்டிங் உரிமைகள் வழங்கப்படும்.
பதிவுசெய்யப்பட்ட சேவை வழங்குனர்களை எளிதாக்கும் நோக்கத்திற்காகவும், திட்டத்தை சுமுகமாக செயல்படுத்துவதற்காகவும் ரயில்வே வாரிய மட்டத்திலும் மண்டல ரயில்வே மட்டத்திலும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வேயில் மொத்தம் ஏழு தனியார் நபர்கள் பாரத் கௌரவ் ரயில்கள் தீம் கீழ் பதிவு செய்துள்ளனர். இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே முழுவதும் அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் இதுவாகும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ரெயில்களை தனியார்மயம் ஆக்குவதில் மோடி தலைமையிலான பாஜக அரசு முயற்சிமேற்கொண்டுவருகிறது. அதற்காகவே பாரத கவுரவ_ ரெயில் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கான பாலிசியும் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.
காங்கிரஸ் கட்சி உருவாக்கிய நாட்டின் மிகப்பெரியபொதுத்துறை நிறுவனமான ரெயில்வே துறையை தனியார்மயம் ஆக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மோடி அரசு, தற்போது தென்மாநில ரயிலை பாரத் கவுரவ் ரயிலாக மாற்றி இருப்பது, தனியார் மயத்துக்கான முதல் படியாக பார்க்கப்படுகிறது.