அப்போது, பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு நிரந்தர அரசு வேலை வழங்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், சேதமடைந்த வீடுகளை புனரமைக்க தலா ரூ.2 லட்சமும் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில், பிர்பூம் மாவட்டத்தில் வீடுகள் எரிக்கப்பட்டதில் கொல்லப்பட்ட 10 குடும்ப உறுப்பினர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை முதல்வர் மம்தா பானர்ஜி வழங்கினார்.
மேலும், ராம்பூர்ஹாட் பகுதியில் உள்ள நிறுவனங்களில் பணியில் சேரும்போது இறந்தவரின் உறவினர்கள் எந்த பிரச்சினையும் சந்திக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் மாவட்ட ஆட்சியருக்கு மம்தா உத்தரவிட்டார்.
இதையும் படியுங்கள்.. டி.ஆர்.எஸ்.கட்சியுடன் கூட்டணி இல்லை- ராகுல் காந்தி உறுதி