இந்தியாவில் வலுவாக தடம்பதித்துள்ள சீன நிறுவனமான
சியோமி
மீது, தனியுரிமை தகவல்கள் பாதுகாப்பு தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன் புகார்கள் எழுந்தன. இதை எளிதில் கடந்து வந்த நிறுவனம் தற்போது புதிய சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது.
அதாவது, சியோமி தனது ஸ்மார்ட்போன்களில்
app throttling
செய்வதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்களுக்கான தரநிலையை பகுப்பாய்வு செய்யும் Geekbench நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஜான் பூலே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சிக்கலில் சியோமி
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில் சியோமி தனது Mi தொகுப்பு ஸ்மார்ட்போன்களில் இருக்கும் பிற நிறுவன செயலிகளை மட்டுப்படுத்தும் முறையை கையாண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சியோமி எந்த விளக்கமும் இதுவரை பொதுவெளியில் வெளியிடவில்லை.
ஜான் பூலே ட்விட்டர் பதிவில், “
Xiaomi Mi 11
ஸ்மார்ட்போன் சில ஆப்களின் செயல்திறனைக் கையாள்வது கண்டறியப்பட்டுள்ளது. இவை செயலிகளின் திறனை வலுவிழக்கச் செய்கிறது. அசல் பெஞ்ச்மார்க் மதிப்பை ஆராயும் போது, வெவ்வேறு செயலிகளுக்கு இதன் வன்பொருள் செயல்திறன் பெரும் மாறுதல்களுடன் காணப்பட்டது,” என்று தெரிவித்திருந்தார்.
சியோமி இது குறித்து அறிக்கை வெளியிடவில்லை என்றாலும், இதற்கான காரணம் ஒன்றை நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. அதில், ஸ்மார்ட்போனில் நிறுவப்பட்டிருக்கும் வெப்பநிலை மேலாண்மை உத்திகள் காரணமாக தான் இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக கூறியிருக்கிறது.
நம்ம ஊரு டாடாவின் புதிய ‘Neu’ சூப்பர் ஆப் – அனைத்து சேவைகளும் விரல் நுனியில்!
சியோமி அளித்த விளக்கம்
மேலும், “சியோமி ஒரு சிறந்த தயாரிப்பு அனுபவத்தை பயனர்களுக்கு உறுதிசெய்ய வெப்பநிலை மேலாண்மை உத்திகளைப் பயன்படுத்துகிறது. குறிப்பாக நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தப்படும் செயலிகளின் தரம் அறிந்து இவை கணக்கிடப்படுகின்றன. எங்களின் பல சாதனங்களில், 3 வகையான செயல்திறன் முறையை வழங்குகிறோம்.
பயனர்களுக்கான செயல்திறன், சமநிலை திறன், ஆற்றல் திறன் ஆகியவற்றை சமமாக வழங்குவதே எங்கள் தயாரிப்புகளின் நோக்கம். பயனர்களின் ஆற்றல் நுகர்வை கணித்து, அவர்களுக்கு சிறந்த பேட்டரி பேக்கப், போன் சூடாவதை தடுப்பது போன்றவற்றை கையாள எங்களின் பிரத்யேக வெப்பநிலை மேலான்மை உத்திகள் தானாக வேலை செய்கிறது,” என்று சியோமி நிறுவனம் பதிலளித்துள்ளது.
சாம்சங் மற்றும் ஒன்பிளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் மீதும் இதே போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், நிறுவனங்கள் இதே போன்ற விளக்கங்களை அளித்தது குறிப்பிடத்தக்கது.
மிரட்டும் அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகும் சியோமி 12 ப்ரோ!
App performance throttling என்றால் என்ன?
ஆப் பெர்பார்மென்ஸ் த்ரோட்டிலிங் என்பது ஒரு குறிப்பிட்ட செயலியின் திறனை வேண்டுமென்றே குறைப்பதாகும். கேமிங் திறன், பேட்டரி ஆயுளை அதிகரிப்பதே ஸ்மார்ட்போனில் உள்ள த்ரோட்லிங்கின் நோக்கமாகும். இது ஸ்மார்ட்போன் அதிக வெப்பமடையும் அபாயத்தை குறைக்கிறது.
கூகுள், குரோம், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், நெட்பிளிக்ஸ், ஜூம் போன்ற பல பிரபலமான பயன்பாடுகளின் செயல்திறனை கூகுள் பிளே ஸ்டோரில் வேண்டுமென்றே கட்டுப்படுத்தும் வகையில் ஸ்மார்ட்போன் பிராண்டுகளான சாம்சங் மற்றும் ஒன்பிளஸ் ஆகியவை செய்தது கண்டறியப்பட்டது.
பதிவிறக்கம் செய்யப்பட்ட பயன்பாடுகளின் செயல்திறனைத் தானாகக் குறைப்பது, சொந்த பயன்பாடுகளின் செயல்பாட்டை மேம்படுத்துவது போன்ற வேலைகளையும் இந்த ஆப் த்ரோட்லிங் முறை மேற்கொள்கிறது. காரணங்கள் கேட்டால், அனைத்து நிறுவனங்களும் User Experience என்ற ஒற்றை வார்த்தையைக் கூறி இந்த குற்றச்சாட்டில் இருந்து தப்பித்து வருவது வாடிக்கையாகிப் போனது.
அடுத்த செய்திநம்ம ஊரு டாடாவின் புதிய ‘Neu’ சூப்பர் ஆப் – அனைத்து சேவைகளும் விரல் நுனியில்!