உலகையே உலுக்கிய உக்ரைனின் புச்சாவில் இடம்பெற்ற படுகொலைகள், பிரித்தானியாவால் திட்டமிடப்பட்டு உக்ரைனால் அரங்கேற்றப்பட்டது என உக்ரேனிய எம்.பி. Ilya Kiva தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் புச்சா நகரில் உக்ரேனியர்கள் படுகொலை செய்யப்பட்டு சடலங்கள் சாலையில் வரிசையாக கிடந்த காட்சி வீடியோவாக இணையத்தில் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, ரஷ்ய மீது புதிய கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகள் தயாராகி உள்ளன.
இந்நிலையில், உக்ரைன் எம்.பி. Ilya Kiva வெளியிட்ட வீடியோவில், புச்சாவில் நடந்தது பிரித்தானியா MI6 உளவுத்துறையால் திட்டமிட்டப்பட்டு, உக்ரைனின் SBU-வால் அரங்கேற்றப்பட்டது.
உக்ரைன் SBU படைகள், அதிகாலையில் புச்சாவிக்கு சென்று, அப்பகுதியை சுற்றி வளைத்து, சாலையில் சடலங்கைளை சிதறித்தனர். பின் அவர்கள் ஊடகவியலாளர்களை வரவழைத்தனர்.
இது முடியாது? நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக கூறிய நாமல் ராஜபக்ஷ
இதனையடுத்து, சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க சம்பவயிடத்திற்கு ஜெலன்ஸ்கி சென்றார். ஆனால், அவை அனைத்தும் போலியானது.
ஏன் இதுபோன்ற நிலைமை Sumy அல்லது CHernihiv-வில் இல்லை? என எம்.பி. Ilya Kiva கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டை விட்டு தப்பியோடிய எம்.பி. Ilya Kiva, தற்போது ஸ்பெயினில் இருந்த படி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.