கொல்கத்தா :
நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுமாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘எரிபொருள் விலை உயர்வை எதிர்கொள்வதற்கு மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை. இந்த நெருக்கடிக்கு பா.ஜனதாதான் காரணம். உத்தரபிரதேச தேர்தலில் வென்றதற்கு நாட்டு மக்களுக்கு பா.ஜனதா கொடுத்துள்ள பரிசு இது’ என்று சாடினார்.
எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை பயன்படுத்துவதற்கு பதிலாக, இந்த பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிக்கலாம்….
வரும் கல்வி ஆண்டு முதல் இளநிலை பட்டப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு- மத்திய அரசு முடிவு