இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல் விலை உள்பட அனைத்து அத்தியாவசியங்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதை எதிர்த்து பொது மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், அமைதியான முறையில் போராடுபவர்களுக்கு இலங்கை அரசு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இலங்கையில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பாராளுமன்ற சபாநாயகர் அழைப்பு விடுத்தார். அதன்படி, அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
இதையும் படியுங்கள்..
இலங்கையில் புதிய திருப்பம்- நிதியமைச்சராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் அலி சப்ரி ராஜினாமா