மருத்துவ முகாம்| Dinamalar

காரைக்கால் : காரைக்காலில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமை நாக தியாராஜன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.புதுடெல்லியில் இயங்கும் ‘ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் பாரத்’ என்ற அமைப்பின் மூலம் இந்தியாவின் 75வது சுதந்திர தின ஆண்டை கொண்டாடும் வகையில், நாடு முழுதும் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

அதையொட்டி, காரைக்கால் காமராஜர் கல்வியியல் கல்லுாரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது. முகாமை நாகதியாகராஜன் எம்.எல்.ஏ., குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். துணை மாவட்ட ஆட்சியர் ஆதர்ஷ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.