பெங்களூரு குடிநீர் பிரச்னை தொடர்பாக, ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் பிரதமரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான தேவகவுடா வலியுறுத்தினார்.ராஜ்யசபாவில் நேற்று அவர் பேசியதாவது:குடிநீர் பிரச்னையை மட்டும் பேசுகிறேன். எந்த அணை கட்டுவது பற்றியோ, அது தொடர்பான பிரச்னை பற்றியோ பேசவில்லை.அது பற்றிய தகவல்கள் என்னிடம் உள்ளன. மேலும் நீர் பங்கீடு பற்றியும் எனக்கு முழுமையாக தெரியும். அந்த பிரச்னையை நான் முன்வைக்க மாட்டேன்.
இருநுாறு ஆண்டுகளாக நீர் பங்கீடு பிரச்னை என்ன என்பதை நான் முழுமையாக அறிவேன். தேவைப்பட்டால், நான் இந்த அனைத்து பிரச்னைகளையும் சபையில் சுருக்கமாக கூற முடியும்.ஆனால், பெங்களூரு நகருக்கு குடிநீர் மட்டும் தேவை. துரதிருஷ்டவசமாக, காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தில் இருந்து பெங்களூரு குடிநீர் தேவைக்கு 4.75 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே பங்கீடு செய்யப்பட்டது. இது முற்றிலும் நியாயமானது அல்ல.பெங்களூரு நகரில் இன்று சுமார் 1.30 கோடி பேர் வாழ்கின்றனர். கர்நாடக மாநிலத்தில் தண்ணீர் பிரச்னை மிக அதிகமாக உள்ளது. நான் அது பற்றி தற்போது பேச போவதில்லை.
குடிநீருக்கும் பிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை மிகவும் வேதனையுடன் சொல்கிறேன்.கர்நாடகா உட்பட மூன்று மாநிலங்களுக்கும் மத்திய அரசு குழுவை அனுப்பி, தண்ணீர் பிரச்னை குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யட்டும்.இன்று பெங்களூரில் குடிநீர் பிரச்னையால் அவதிப்பட்டு வருகிறோம். அனைவரும் பாரபட்சத்தை மறந்து இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
– நமது நிருபர் –
Advertisement