மாஜி மல்யுத்த வீரர்கள்| Dinamalar

பெங்களூரு, : ”முன்னாள் மல்யுத்த வீரர்களின் உதவித்தொகை, 1,000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது,” என இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நாராயண கவுடா தெரிவித்தார்.பெங்களூரில் அவர் நேற்று கூறியதாவது:முதல்வர் பசவராஜ் பொம்மை, 2022 – -23 பட்ஜெட்டில், 50 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் மல்யுத்த வீரர்களின் உதவித்தொகை அதிகரிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி, மாநில அளவில் 2,500 ரூபாயிலிருந்து 3,500 ரூபாயாகவும்; தேசிய அளவில் 3,000 ரூபாயிலிருந்து 4,000 ரூபாயாகவும்; சர்வதேச அளவில் 4,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.நான், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, முன்னாள் மல்யுத்த வீரர்கள், தங்களின் உதவித்தொகையை அதிகரிக்க வேண்டும் என கேட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.